நேற்று ஒரு ரீல்ஸ் பார்த்தேன். அதில் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண்ணிடம் கேட்டார்கள், "பள்ளி சீருடை கட்டுப்பாடு தேவையா?" அவள் பெண்ணியம் + பஞ்ச் டயலாக் மோடில், "சீருடை வேண்டாம், விடுதலை வேண்டும்!" என்று தெரிவித்தார்.
அதை பார்த்தவுடன் என் மூளை: "சீருடையின் அவசியம் தெரியாமல் இப்படி ஒரு புலம்பல்!"
அடுத்த நொடியே என் பள்ளி நாட்கள் புது Flashback ஆக மாறி வந்தது.
https://youtube.com/shorts/ZsXO_zbdR-o?si=47vH-kUY7pdlS3rG
சீருடை மற்றும் நான் – நெருங்கிய உறவு:
என் பத்தாம் வகுப்பு வரை, சீருடையைத் தவிர, ஒரு கலர் டிரஸ் மட்டுமே எனக்கு இருந்தது. அதுவே என் வரலாற்றுப் பொக்கிஷம்!
சனிக்கிழமைகளில் மட்டும், சீருடை கட்டுப்பாடு இல்லாமல் கலர் டிரஸ் அனுமதி. இது மற்ற குழந்தைகளுக்கு "பார்டி டே", எனக்கோ "கண்ணீருடை டே"!
நான் சனிக்கிழமையின் சிறந்த மாணவன்:
வியாழக்கிழமையே யோசனை தொடங்கும்:
"அந்த ஒரே ஒரே கலர் டிரஸ்சையே எப்படி மீண்டும் அணிவது?"
அதே டிரஸ், அதே மஞ்சள் நிறம், அதே பார்வைகள் – என்ன சனிக்கிழமையோ!
மாதம் ஒரு முறை மட்டுமே கலர் டிரஸ் அணிய முடியும் என்பதால், மீதமுள்ள சனிக்கிழமைகளில், சீருடையையே உத்தியோகபூர்வமாக அணிந்து பள்ளிக்குச் செல்வேன்.
என் சில தணிவூட்டும் நண்பர்கள், "நான் கலர் டிரஸ் இல்லாததால் வருத்தமா இருக்கிறது!" எனக் கருதி, அவர்கள் கூட சனிக்கிழமைகளில் சீருடை அணிந்து வருவார்கள். (அன்பின் பார்வை..! நன்றி நண்பர்களே!)
அந்த ஆணி, அந்த கலர் டிரஸ் – கிழிந்த கதை :
ஒரு வருடம், தீபாவளி பரிசாக என் பெரியம்மா எனக்கு ஒரு கலர் டிரஸ் கொடுத்தார்.
அது அந்த ஆண்டின் கலர் டிரஸ்! பொக்கிஷம்.
சீருடையின் மகத்துவம் அறிந்த நான் சீருடை அல்லவா அணிந்திருக்க வேன்டும். இல்லை, புது உடை அணிந்தேன், ஓடினேன் ஆடினேன் கிழித்தேன். ஒரு ஆணி என் ஒரு வருட மன உளைச்சல். விடவில்லை எங்கள் வீட்டின் வறுமையும் விட்டுவைக்கவில்லை. அன்று இரவே பக்கத்து வீட்டு டைலர் அக்காவிடம் குடித்து அம்மா தைத்து கொடுத்தார். மீதும் வருடம் முழுவதும் அணிந்து திளைத்தேன்.
சீருடையின் முக்கியம் – அதே "அழகு":
சீருடை எனக்கு எப்போதும் சமத்துவம் என்பதை உணர்த்தியது. "ஏன் சனிக்கிழமைகளில் கூட இந்த சீருடையை கட்டாயமாக்கமாட்டீர்கள்?" என பள்ளிக்கூடத்தை திட்டிய நாட்கள் இருக்கின்றன.
இன்று யாராவது "சீருடை வேண்டாம்!" என்று சொன்னால், என் மனதில்:
"ப்ளீஸ்... ஒரே ஒரு கலர் டிரஸ் கொண்ட ட்ரெஜெடி காமெடி கதையை கேட்கின்றீர்களா?"
சீருடை என்பது வெறும் ஆடை அல்ல, ஒரு சமத்துவச் சான்று..!